மிலிட்டரி ஆபீஸராக கெத்து காட்டப்போகிறார் தமன்னா!

பார்வையாளர்களின் விமர்சனம் மிலிட்டரி ஆபீஸராக கெத்து காட்டப்போகிறார் தமன்னா! 0.00/5.00

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் தற்போது விஷாலுடன் ஜோடி சேர்ந்து “ஆக்சன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் தமன்னா ராணுவ அதிகாரியாக நடித்து வருவதாக தெரிகிறது. இதற்குமுன் தமன்னா பாகுபலி படத்தில் போர் வீரராக நடித்திருப்பார். அதற்கு பலர் இவருக்கு செட் ஆகவில்லை என்றும் சிலர் அருமையாக நடித்துள்ளார் என்றும் கூறியிருந்தனர். தற்போது ராணுவ அதிகாரியாக நடித்து மாஸ் காட்ட இருக்கிறார்.


இதுபற்றி இயக்குனர் சுந்தர்.சி கூறுகையில், ’ராணுவ பெண் கமாண்டோவாக தமன்னா நடிக்கிறார். விஷாலுடன் இவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார். குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.  70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் மற்ற காட்சிகள் ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத், சென்னையிலும் படமாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட பணிகள் நடந்துவருகின்றன’என்று கூறியுள்ளார்.