கண் தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் தல அஜித்…!

61

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் சிலர் தங்களது படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த படத்தின் வேலை செய்த அனைத்து தொழிலார்களுக்கும் உதவி செய்வது  அல்லது பணம், தங்க நாணயம் வழங்குவது வழக்கமாக வைத்துள்ளனர்.


அது வெளியே தெரியக்கூடாது என்றாலும் சிலர் அதனை தெரியப்படுத்தி விடுகிறார்கள். அதாவது, “பிகில்” படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்தவுடன் நடிகர் விஜய் படத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் மோதிரம் கொடுத்தார்.


அடுத்ததாக நடிகர் சூர்யா “காப்பான்” படப்பிடிப்பு முடிந்ததும் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் ஒரு பவுன் தங்க செயின் கொடுத்தார். இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று சூர்யா அன்பு கட்டளை விடுத்துள்ளார். அனாலும் இந்த விஷயம் வெளியே கசிந்துவிட்டது.


தற்போது அஜித்தின் நெருங்கிய நண்பரும், நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான கண் டாக்டர் விஜய் சங்கர் கூறுகையில், உங்களிடம் கண் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் ஆபரேஷன் செய்வதற்கு பணவசதி இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடாதீர்கள். அந்த நோயாளிக்கு சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். அந்தந்த நோயாளிக்குச் செலவான பணத்தின் தொகையை எனக்கு அனுப்புங்கள்.


இன்னொரு முக்கியமான விஷயம், நான்தான் பண உதவி செய்கிறேன் என்பது அந்த நோயாளிக்கு தெரியவே கூடாது. இதில் ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று டாக்டருக்கு அன்பு கட்டளையுடன் கூறியிருக்கிறார்.