தல அஜித்தும் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியுள்ளார்…!உங்களுக்கு தெரியுமா…!

109

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டங்களில் நிக் ஆர்ட்ஸ்  சக்கரவர்த்தி தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார்.


அந்த தயாரிப்பில் நடிகர் அஜித்திற்கு ஒரு பங்கு இருக்கிறது. மேலும் சக்கரவர்த்தியும், அஜித்தும் நெருங்கிய நண்பர்கள். அஜித்  நடித்துள்ள பாதி படத்தை சக்கரவர்த்தி தான் தயாரித்துள்ளார்.


இவர் தயாரித்த படத்தின் லாபம், நஷ்டம் அனைத்திலும் அஜித்தின் பங்கும் இருக்கிறது. நிக் ஆர்ட்ஸ் கடைசியாக தயாரித்த படம் சிம்பு நடித்த “வாலு”.


இதனிடையில், சக்கரவர்த்தி பைனான்ஸ் பிரச்சனையில் பயங்கரமாக சிக்கியுள்ளார். அந்த பாதிப்பு நடிகர் அஜித் குமாரையும் பாதித்தது. இதனால் அஜித்திற்கு சக்கரவர்த்தி வாங்கிய கடன்களில் பாதி பங்கு உள்ளது.


இதனால் அஜித் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி அடுத்ததாக படத்தை தயாரிக்க முன் வரவில்லை.


தற்போது தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அஜித் பட்ட கஷ்ட்டத்தை மற்ற நடிகர்கள் படும் போது அஜித் எடுத்த முடிவையே எடுப்பார்கள்.