இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறும் பிரபலங்கள்..!

பார்வையாளர்களின் விமர்சனம் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறும் பிரபலங்கள்..! 0.00/5.00

தமிழகத்தை சேர்ந்த சிவன் தலைமையில் இந்தியாவிலிருந்து சமீபத்தில் “சந்திராயன் 2” விண்கலம் விண்ணில்  செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக நிலவின் தென்பகுதிக்கு சென்ற “விக்ரம் லேண்டர்” தரையிறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதிலிருந்து சிக்னல் திடிரென்று கிடைக்கவில்லை.


பதறிப்போன இஸ்ரோ விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து வந்தார்கள். அது தற்போது தோல்வி அடைந்துவிட்டது. இதனால் அங்குள்ள அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ தலைவர் சிவனை கட்டிபிடித்து ஆறுதல் தெரிவித்தார்.


இந்த நிகழ்வு உலகில் உள்ள அனைத்து நாட்டினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு பலர் இந்தியாவிற்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். மேலும் திரையுல பிரபலங்கள் பலர் இஸ்ரோ மையத்திற்கு பாராட்டும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.


திரையுலக பிரபலங்கள் தனது பாராட்டை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் நமீதாவின் கவர்ச்சி! வைரலாகும் புகைப்படம்..!


இதுகுறித்து நடிகர் மாதவன் பதிவில், “எதுவாக இருந்தாலும் சரி.. இது சரித்திர நிகழ்வே. எனக்கென்னவோ விக்ரம் லேண்டரை நிலைநிறுத்தும் ஃபைன் பிரேக்கிங் த்ரஸ்டர்கள் தென் துருவ குளிர்ச்சியால் உறைந்து மூடியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.


நிலவின் தென் துருவ ஆராய்ச்சியில் 90%-ஐ ஆர்பிட்டரே மேற்கொள்ளும். கடவுளின் ஆசியில் அது பத்திரமாகவே இருக்கிறது. அதனால் இந்த மிஷன் இன்னமும் வெற்றிகரமாகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து நடிகர் விவேக் பதிவில், “1979 ஆம் ஆண்டில் டாக்டர் கலாம் எஸ்.எல்.வி 3 ஐ சுற்றுப்பாதையில் செலுத்தியபோது அதே மகிழ்ச்சி. இது வங்காள விரிகுடாவில் மூழ்கியது. ஆனால் நாங்கள் தோல்விகளை நிறுத்தவில்லை. பல சாதனைகளுடன் நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பதிவில், விஞ்ஞானத்தில் வெற்றி தோல்விகளை விட முயற்சிகளே முக்கியம். சந்திராயன் விழுந்தாலும் விதையாக தான் விழுந்தது. உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறோம் சிவன் அய்யா!


இதுகுறித்து நடிகை யாஷிகா ஆனந்த் பதிவில், இஸ்ரோவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். உலகின் மற்ற நாடுகளை விட இந்திய விஞ்ஞானிகள் உயர்ந்தவர்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இந்தியாவின் பெருமையை உலகிற்கே எடுத்துக்காட்டிய விவசாயி மகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்! என்று பதிவு செய்துள்ளார்.