வெற்றிமாறனுடன் இணைகிறாரா சூர்யா..?

பார்வையாளர்களின் விமர்சனம் வெற்றிமாறனுடன் இணைகிறாரா சூர்யா..? 0.00/5.00

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “அசுரன்”. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.


அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அடுத்ததாக “வடசென்னை 2” படத்தை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்.


இந்நிலையில், மீண்டும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்  வெற்றிமாறன் ஒரு படத்தை  இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில் நாயகனாக  சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


ஆனால், தற்போது சூர்யா “சுதா கொங்கரா” இயக்கத்தில் “சூரரை போற்று” படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து வரிசையாக பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.


இதனிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.