சூர்யா – சிவா படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு…!

பார்வையாளர்களின் விமர்சனம் சூர்யா – சிவா படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு…! 0.00/5.00

நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் செம்டம்பர் மாதம் 20தேதி வெளியாக இருக்கிறது.


இதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் “சூரரை போற்று” படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வருகிறது.


இந்நிலையில், சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று(ஆகஸ்ட் 12) வெளியாகியுள்ளது.


ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கவுள்ளார். மேலும் ஒளிப்பதிவாளராக வெற்றி, படத்தொகுப்பு ரூபன், ஸ்டண்ட் திலீப் சுப்பராயன் உள்ளிட்டோர் பணியாற்ற இருக்கின்றனர்.