ரஜினியை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…!

8

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் ஒரு கல்லூரியின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ளார்.


ரஜினிகாந்த் அங்கு திடிரென்று வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ரஜினிகாந்தை பார்த்து தலைவா, சூப்பர் ஸ்டார் என கூச்சலிட்டனர். அவர் அந்த கல்லூரிக்கு வந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.