உண்மையாகவே அக்காவிடம் அடிவாங்கிய ஜி.வி.பிரகாஷ்…

73

இயக்குனர் சசி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக  வரவேற்பை பெற்ற படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”. இதில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், காஷ்மீர, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இதில் ஜி.வி.பிரகாஷ் அக்காவாக மலையாள நடிகையான  லிஜோமோல் ஜோஸ் நடித்திருந்தார். தமிழின் முதல் படத்திலே  அக்காவாக நடித்து தனி பெயர் பெற்றுள்ளார்.


இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு இயக்குனர் ஒரு சின்ன ஒர்க்ஷாப் வைத்து இவரை தேர்வு செய்துள்ளார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இந்த படம் முழுவதும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்.


இதில், ஒரு காட்சியில் ஜிவி பிரகாஷை அவரது அக்கா அடிக்கும் காட்சி இருக்கும். அதை உண்மையாகவே செய்தாராம் மலையாள நடிகை. பல டேக்குகள் எடுத்து அந்த காட்சியை முடித்துள்ளனர்.


ஜிவி பிரகாஷை உண்மையாகவே அடித்ததற்காக அவர் மிகவும் வருத்தப்பட்டாராம்.

Image result for sivappu manjal pachai movie