மாநாடு போனா என்ன? மகா மாநாடு வருது!! ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சிம்பு!!

பார்வையாளர்களின் விமர்சனம் மாநாடு போனா என்ன? மகா மாநாடு வருது!! ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சிம்பு!! 0.00/5.00

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவிருந்த படம் “மாநாடு”. இதன் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே போனதால் இப்படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டார்.


இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து “மாநாடு” படத்தில் சிம்புவுக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் அறிவித்தார்.


இந்நிலையில், சிம்பு’வின் சொந்த தயாரிப்பில் “மாநாடு” படத்திற்கு பதிலாக சிம்பு “மகா மாநாடு” என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இது வெங்கட் பிரபுவின் “மாநாடு” படத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.