ஜெயலலிதா படத்துல சசிகலா இல்லையா..?

54

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை பலர் எடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். தற்போது இயக்குனர் விஜய், கங்கனா ரணாவத்தை வைத்து படத்தை எடுத்து வருகிறார்.


அடுத்ததாக இயக்குனர் கௌதம் மேனன், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை வெப் சீரிஸாக எடுக்க எடுத்து முடித்துள்ளார். ஜெயலலிதாவின் குழந்தை பருவம், இளமை பருவம், எம்.ஜி.ஆர், சிவாஜியோடு திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகள், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது, முதல் அமைச்சராக இருந்தது, இறந்தது என்று அனைத்தையும் படமாக்கி படத்துக்கு ‘குயின்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.


ஆனால், இந்த படத்தில் சசிகலா கதாபாத்திரம் இல்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.