அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகும் சமுத்திரக்கனி…!

பார்வையாளர்களின் விமர்சனம் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகும் சமுத்திரக்கனி…! 0.00/5.00

இயக்குனர் சமுத்திரக்கனி தற்போது பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் “அடுத்த சாட்டை” திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதனை தொடர்ந்து சசிகுமாரை வைத்து “நாடோடிகள் 2” படத்தை இயக்கி வருகிறார்.


அடுத்ததாக தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் அவருக்கு வில்லனாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.


இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.