பாரதிய ஜனதாவில் இணைந்த  ஆர்.கே.சுரேஷ்…!

பார்வையாளர்களின் விமர்சனம் பாரதிய ஜனதாவில் இணைந்த  ஆர்.கே.சுரேஷ்…! 0.00/5.00

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த “தாரை தப்பட்டை” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். அதனை தொடர்ந்து “மருது” ,”ஸ்கெட்ச்” போன்ற படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.


சலீம், தர்மதுரை உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அடுத்ததாக சரவணா சக்தி இயக்கத்தில் “பில்லா பாண்டி” என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது சமீபத்தில் வெளிவந்த “நம்ம வீட்டு பிள்ளை” ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


சாதாரணமாகவே இவர் சமூக அக்கறையுடன் மக்களுக்கு சில நலத்திட்டங்களை செய்து வருபவர். மேலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.


தற்போது இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.