கௌதம் மேனனை நம்பாத சசி..! மீண்டும் “சிவப்பு மஞ்சள் பச்சை” 

29

கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்ட படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தும் வெளியாவதில் பல சிக்கல் இருந்தது.


அந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து செப்டம்பர் 6ஆம் படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அதனால் “சிவப்பு மஞ்சள் பச்சை” படம் தள்ளிப்போனது. ஆனால் மீண்டும் “எனை நோக்கி பாயும் தோட்டா” படம் சிக்கலில் மாட்டியுள்ளது.


மேலும் படம் வெளியாவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இப்படம் வெளியாகும் என்று நம்பி படத்தை தள்ளிப்போட்ட இயக்குனர் சசி, மீண்டும் படத்தை சொன்ன தேதியில்(செப்டம்பர் 6) வெளியிடவுள்ளார்.