அஜித்தை போனில் பாராட்டிய ரஜினிகாந்த்…!

பார்வையாளர்களின் விமர்சனம் அஜித்தை போனில் பாராட்டிய ரஜினிகாந்த்…! 0.00/5.00

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியுள்ளார்.


“நேர்கொண்ட பார்வை ” படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் அஜித் மற்றும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு, அஜித்திற்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.


அஜித் இந்த படத்தை தெடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக “தல 60” தலைப்பு வைத்துள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். மேலும் அஜித் இந்த படத்தில் பைக் ரேஸராக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.