வில்லனாகவே இருக்க ஆசைப்பட்டரஜினியை, ஹீரோவாக்கிய கலைஞானம்…!

பார்வையாளர்களின் விமர்சனம் வில்லனாகவே இருக்க ஆசைப்பட்டரஜினியை, ஹீரோவாக்கிய கலைஞானம்…! 0.00/5.00

தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர் கலைஞானம். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

கதாசிரியர் கலைஞானம், வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்தை ஹீரோவாக “பைரவி” படத்தில் அறிமுகம் செய்து, சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்று தந்தவர். இந்த படத்திற்கு பின் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை.

தமிழ் சினிமாவில் 70ஆண்டுகளுக்கு மேலாக அளப்பரிய பணியாற்றி வருகிறார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், இயக்குனர் பாரதிராஜா தலைமையில் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொன்டு ரஜினி பேசுகையில், “ நான் என்றைக்கும் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டதில்லை. பைக், வீடு இது மட்டுமே போதும் என்று நினைத்து மிக மகிழ்ச்சியாக இருந்தேன். வில்லனாக நடித்துகொண்டிருக்கும்போதே, திடீரென பைரவி படத்தில் ஹீரோவாக நடிக்க கலைஞானம் அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன். அந்தப் படத்தில் தான் முதன்முதலில் எனக்கு சூப்பர்ஸ்டார் பட்டமும் கொடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு பின்பு நானும் கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது” என்று தெரிவித்தார்.