இயக்குனர் மணிகண்டன் கதையை மறுத்த ரஜினி..!

பார்வையாளர்களின் விமர்சனம் இயக்குனர் மணிகண்டன் கதையை மறுத்த ரஜினி..! 0.00/5.00

“காக்க முட்டை” மணிகண்டன் இயக்கி வரும் படம் “கடைசி விவசாயி” இதில், விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னதாக நடிக்க ரஜினியை தேர்வு செய்தாராம் இயக்குனர். ஆனால் இந்த கதையில் நடிக்க ரஜினி மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, இயக்குனர் மணிகண்டன் கூறுகையில், “கதையை எழுதி முடித்த உடன் இந்த கதை சொல்லும் கருத்து மிகப்பெரியது. எனவே ரஜினி போன்ற ஒரு கதாநாயகன் சொன்னால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதையை சொன்னேன். ஆனால் அவர் இந்த கதையில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. நான் அவரை சந்தித்து கதை சொன்ன அடுத்த வாரம் அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்டார்”என்றார்.