நயன்தாராவுடன் ஜெய்ப்பூர் பறந்த ரஜினிகாந்த்…!

11

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.


இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க மும்பை சென்ற படக்குழு வரலாறு காணாத மழையால் சென்னை திரும்பியது.


மும்பைக்கு பதிலாக ஜெய்ப்பூரில் படப்பிடிப்பை நடத்த ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் படக்குழுவினர் விமானம் முலம் ஜெய்ப்பூர் பறந்துள்ளனர்.


இதில், ரஜினிகாந்த் அருகில் நயன்தாரா அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.