தயாரிப்பாளர்கள் சிக்கலில் சிக்கிய சிம்பு..!

32

நடிகர் சிம்புவை வைத்து படம் எடுப்பதற்குள் தயாரிப்பாளர்கள் நொந்து போய்விடுகின்றனர். சிம்புவின் மேல் படக்குழுவினர் ஏகப்பட்ட குற்றசாட்டுகளை கூறி கொண்டு இருப்பார்கள்.


இவர் நடிப்பில் வெளியான “அன்பானவன் அசரதவன் அடங்காதவன்” படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் சிம்புவுக்கும் பணப் பிரச்சனை ஒன்று உள்ளது. அது இன்னும் தீர்வுக்கு வரவில்லை.


சமீபத்தில் “மாநாடு” பிரச்சனை, தற்போது கன்னட ரீமேக்கில் நடித்து வரும் சிம்புவினால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பாதிக்கப்பட்டதை தயாரிப்பாளர் சங்கத்திடம் கூறியுள்ளார். இவர்களுடன் மைக்கேல் ராயப்பனும் சங்கத்திற்கு சென்றுள்ளார்.


தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது பாதிக்கப்பட்ட தொகையை பெற்று தருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.