“தளபதி 64” பற்றிய வதந்தி..? பதிலளித்த தயாரிப்பு நிறுவனம்…!

75

தளபதி விஜய் நடித்துள்ள “பிகில்” படத்தை இயக்குனர் அட்லீ  இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, கதிர், ஆனந்த ராஜ், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு “தளபதி 64” தலைப்பு வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தில் விலகிவிட்டதாக சில தகவல்கள் பரவி வந்தது.


இந்நிலையில், சேவியர் தனது ட்விட்டர் பக்கத்தில், இது முழுக்க முழுக்க வதந்தியான செய்தி, இதை பெரிது படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்.


இதிலிருந்து “தளபதி 64” படத்திலிருந்து தயாரிப்பு நிறுவனம் விலகவில்லை என்று தெரிகிறது.