90 கோடி சம்பளம் கேட்ட சூப்பர் நடிகர்! தெறித்து ஓடிய தயாரிப்பாளர்!!

120

அரசியல் அறிவிப்பு ஒருபுறம்; சினிமா ஆசை இன்னொருபுறம் என்று அடுத்தடுத்து சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் நடிக்கவுள்ள படத்தை உறுதி செய்யும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. புதிய படத்தை இயக்குவது யார்? எந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பன போன்ற விசயங்கள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

Image result for rajinikanth


இந்நிலையில் பிரபலமான படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் தயாரிப்பில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார். இதனால் உற்சாகம் அடைந்த அந்த நிறுவனம், படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கேட்ட சம்பளத் தொகையைப் பார்த்து தெறித்து ஓடி விட்டதாம். அவருக்கு மட்டும் 90 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் பட்ஜெட் தாங்காது என்றுகூறி தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளது.


இதையடுத்து கொஞ்சம் இறங்கி வந்த சூப்பர் ஸ்டார் தரப்பு, 75 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனம் இன்னமும் ஆழ்ந்த யோசனையில்தான் இருக்கிறதாம். ஏனென்றால் இயக்குனர் யார் என்றும், அவருக்கான சம்பளம் குறித்தும் பேசவேண்டியுள்ளது. அதன்பிறகே சம்பளத்தொகை குறித்து முடிவு செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இயக்குனர் மற்றும் ஹீரோவின் சம்பளம் ஒத்து வந்தால் இதுவரை ரஜினியை வைத்து படம் எடுக்காத புதிய நிறுவன, ரஜினியில் புதிய படத்தை தயாரிக்கிறது என்ற செய்தி விரைவில் வெளியாகும் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.