வடிவேலு நடிக்கவே கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்கய்யா…!

பார்வையாளர்களின் விமர்சனம் வடிவேலு நடிக்கவே கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்கய்யா…! 0.00/5.00

90ஸ் களில் ஒரு படம் வெளியாகிறது என்றால் “வைகைபுயல்” வடிவேல் இல்லாமல் இருக்காது. இன்றளவும் வடிவேல் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றிருக்கிறார்.


வடிவேல் மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டால் ரசிகர்கள் அவர் படங்களை வரவேற்க தயாராக இருக்கின்றனர். இந்நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் “இம்சை அரசன் 24ஆம் புலிகேசி” படத்தில் நடித்து வந்தார். ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.


இதற்காக படக்குழுவினர் சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். வடிவேலுக்கு, இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இதிலிருந்து விலகினார் வடிவேல்.


இதனால் தயாரிப்பாளரான ஷங்கர், நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய படங்களுக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடைவிதித்தனர்.


நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த பிரச்சனை முடிந்து, ஷங்கருக்கு கொடுக்க வேண்டிய நஷ்டஈடை வடிவேலு, ஷங்கர் படத்தில் நடித்து முடித்துவிடுவார் என தகவல் வெளிவந்தது.


இதுகுறித்து வடிவேலு கூறுகையில், “தயாரிப்பாளர் சங்கத்தில் எனது தரப்பு நியாயத்தை சொன்ன பிறகும் யாரோ தொடர்ந்து பிரச்சினை செய்கிறார்கள். நடிகர் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை என்ற வருத்தம் இருக்கிறது” என்றார்.


இந்நிலையில், புதிய படத்தில் நடிக்க வடிவேல் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.


இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழுவை சேர்ந்த டி.சிவா கூறியது, “இயக்குனர் ஷங்கருக்கான இழப்பீடு தொகையை வடிவேலு கொடுப்பது வரை எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முன்வர மாட்டார்கள்” என்றார். இதன் மூலம் அவருக்கு எதிரான தடை நீடிப்பது உறுதியாகி உள்ளது.