“மிஸ்டர் லோக்கல்” படத்தால் “கோமாளி” படத்திற்கு வந்த சிக்கல்…!

4

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் “கோமாளி”. இப்படத்தை வேல்’ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.


இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதற்கு காரணம், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “மிஸ்டர் லோக்கல்” படம் தான். இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜிடம் இருந்து தியாகராஜன் இந்த உரிமையை வாங்க சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் விநியோகஸ்தர் சக்திவேலன் உதவியுள்ளார்.


இப்படத்தின் திருச்சி உரிமையை பெற்ற ஜி.தியாகராஜன் அட்வான்ஸ் அடிப்படையில் விநியோகம் செய்த ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்த, திருச்சி பகுதி விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கொடுத்த அட்வான்ஸை தியாகராஜனிடம் கேட்டுள்ளனர்.


இப்படத்தை வாங்க உதவிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரியிடம் கேட்டபோதும், அவரும் “இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று சொன்னதால் கோபமடைந்த தியாகராஜன், திருச்சி பகுதி விநியோகஸ்தர்களை சேர்த்துக் கொண்டு “மிஸ்டர் லோக்கல்’ படத்தின் நஷ்டத்திற்கு ஈடு கட்டும்வரையில், ‘சக்தி பிலிம் பேக்டரி’ வெளியிடும் ‘கோமாளி’ படத்தை வெளியிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.