எடிட்டரை அலறவிட்ட ஒளிப்பதிவாளர்…!

பார்வையாளர்களின் விமர்சனம் எடிட்டரை அலறவிட்ட ஒளிப்பதிவாளர்…! 0.00/5.00

ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”. இயக்குனர் சசி இயக்கியிருக்கும் இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது. 


இப்படத்தில், மலையாள நடிகை லிஜோமோஸ் ஜோல், காஸ்மீர உள்ளிட்டோர் நடித்திருந்தார். இதில் ஜிவி பிரகாஷ் அக்காவாக லிஜோமோஸ் ஜோல் நடித்திருந்தார். 


இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ரேஸ் ஓட்டுபவராக நடித்திருந்தார். அதற்காக முறையான பயிற்சிகள் ஜிவி பிரகாசுக்குக்கு  கொடுக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது.


இதில், ஜிவி பிரகாஷ் ரேஸ் ஓட்டும் காட்சிகளை மிகவும் கட்சிதமாக ஒளிப்பதிவாளர் எடுத்திருப்பார்.  இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இயக்குனர் சசியின் தம்பி “பிரசன்ன  எஸ்.குமார்”.

Related image


அதிவேகமாக ஓடும் பைக்கை 360 டிகிரியில் கேமராவை சுழட்டி  மிகவும் அருமையாக எடுத்திருப்பார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், பைக் ரேஸ் ஷாட்களை பக்காவாக பிரித்து 8 நாட்களில் எல்லா ஷாட்களை எடுத்து குவித்து பார்த்து எடிட்டர் அலறிவிட்டார். ஜிவி பிரகாஷ் பைக் ஓட்டும் காட்சியில் 360 டிகிரி கேமரா சூழல அஸ்திரேலியாவிலிருந்து ரிக் வரவழைக்க வேண்டும். அதுவரை காத்திருக்க முடியாது.


ஆனால், நாங்களே அதற்கான ரிக்கை நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து உருவாக்கி பயன்படுத்தினோம். நாம் மனது வைத்துவிட்டால் இயக்குனரின் கற்பனைக்கு நிச்சயமாக உயிர்கொடுக்க வேண்டும்.