இந்தியில் உருவாகும் “தல 60″…?

6

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்தை தயாரித்த போனிகபூர், அஜித்தை வைத்து அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளார்.


தற்காலிகமாக “தல 60” என்ற தலைப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த படம் ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் எனவும், இதில் அஜித் பைக் ரேசராக நடிக்க இருப்பதாகவும் போனிகபூர் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த படம் தமிழில் மட்டும் உருவாகாமல் இந்தியிலும் உருவாக்க திட்டமிட்டு வருவதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.