போலீஸ் பாதுகாப்பு கேட்குறாரு விஷால்!

19

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வர்ற 23-ந்தேதி நடக்க இருக்கு. இதுல பாண்டவர் டீம் சார்பா நாசர்,விஷால்,கார்த்தி,உள்ளிட்டவங்களும் சுவாமி சங்கரதாஸ் டீம் சார்பா பாக்யராஜ்,ஐசரி கணேசன்,உள்ளிட்டவர்களும் போட்டி போடுறாங்க.


அதாவது இந்த தேர்தல் அமைதியான முறையில நடக்கணும்ன்றதுக்காக சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன சந்திச்சி, நடிகர் விஷால் மனு கொடுத்துருக்காரு.


மனு கொடுத்துட்டு செய்தியாளர்கள சந்திச்ச விஷால், நடிகர் சங்க தேர்தல்ல சுமார் 2 ஆயிரம் பேர் வரை ஒட்டு போடறதுக்கு வருவாங்க. நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு தர்றது பத்தி பரிசீலனை செஞ்சு வருவதா, காவல் ஆணையர் விஸ்வநாதன் சொல்லிருக்காரு. இந்த தேர்தல் அடையாறுல நடக்குறதால, எந்த வகையிலும் அந்த பகுதியில போக்குவரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படாது’னு சொல்லிருக்காரு.