அரசியலுக்கு வருகிறாரா ஓவியா..?

பார்வையாளர்களின் விமர்சனம் அரசியலுக்கு வருகிறாரா ஓவியா..? 0.00/5.00

நடிகை ஓவியா தமிழில் சற்குணம் இயக்கிய “களவாணி” படத்தில்  நாயகியாக அறிமுகமானவர். பின்பு “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு, ஆரவ்விற்கும் நடந்த காதல் பரவலாக பேசப்பட்டு வந்தது. 


இதனிடையில் வீரத்தமிழச்சி ஜூலியுடன் நடைபெற்ற போட்டி, சண்டை, சச்சரவு அனைத்திலும் வெற்றிபெற்றவர் ஓவியா.


ரசிகர்கள் இவருக்கு தனி ஆர்மி அமைத்து சில நாட்களாக  சமூக வலைத்தளத்தை அதிர வைத்து வந்தனர். இதற்கு பின் கவர்ச்சி நடிகையாக மாறிய ஓவியாவுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 


சமீபத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக நடித்து  வெளியான  “90எம்.எல்” படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை தந்தனர். ஆனால் இப்படம் வசூல் ரீதியாக மோசமான நிலையை அடைந்தது.


அடுத்ததாக, ஓவியாவை அறிமுகம் செய்த சற்குணத்தின்  “களவாணி 2” படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் பெரிய அளவில் விமர்சனமும், வசூலும் பெறவில்லை. 


தற்போது தமிழில் படம் இல்லை என்பதால் மலையாளத்தில் நடிக்க சென்றுவிட்டார்.  90எம்.எல். படத்தில் கவர்ச்சியாக நடித்ததிற்காக மிகவும் வருத்தப்பட்டதாகவும், இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும், என்னை அரசியலுக்கு வரும் படி, நான்கு கட்சிகள் அழைத்தன என்றும் அதற்கு ஓவியா மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.