வெளிநாடுகளில் வெளியாகாத ஒத்த செருப்பு…?

65

புதுமைப்பித்தன் பார்த்திபன் தற்போது “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தை தயாரித்து, அதில் நடித்து, படத்தை இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இதில் பார்த்திபன்  மட்டுமே நடித்துள்ளார்.


பார்த்திபன் இந்தியாவில் உள்ள சில பிரபலங்களிடம் இப்படத்தை போட்டு காண்பித்துள்ளார். இதை பார்த்த அனைத்து பிரபலங்களும் படத்தை பாராட்டிய வண்ணம் இருக்கின்றனர்.


தற்போது இப்படத்தை கடம்பூர் ராஜு, நடிகர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என பலர் படத்தை பார்த்து விட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மேலும், பலரால் பாராட்டப்பட்ட இப்படம் ஆசிய புக் ரெகார்டஸில் சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கும் பார்த்திபன் பரிந்துரைக்கவுள்ளார். 

Image result for otha seruppu movie images


ஆஸ்கர் விருது பெரும் அளவுக்கு உள்ள இப்படத்தை தற்போது வெளிநாடுகளில் உள்ளவர்கள் காணமுடியாது. ஏனென்றல்  இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை  வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.


இதுபோல் தமிழில் உருவாகும் அருமையான படங்களை வெளிநாடுகளில் வெளியிட யோசித்து வருகின்றனர். ஆனால் இந்த மாதிரி படங்களை பார்க்க முடியவில்லை என அங்குள்ள தமிழ் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.