ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தேசிய விருது பட்டியல்…!

பார்வையாளர்களின் விமர்சனம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தேசிய விருது பட்டியல்…! 0.00/5.00

66-வது தேசிய திரைப்பட விழா, விருதுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழின் சிறந்த படத்திற்க்காக “பாரம்” படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், “மகாநடி” படத்திற்கும், அதில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான விருது ஆயுஷ்மான் குரானா, விக்கி கவுஷல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், தமிழில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த பரியேறும் பெருமாள், சர்வம் தாளமயம், இரும்புத்திரை, ராட்சசன், 96, 2.0, சீதக்காதி, கனா, சூப்பர் டீலக்ஸ், வட சென்னை ஆகிய படங்கள் விருது பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும், இந்த படங்கள் பல திரைப்பட விழாவில் கலந்துகொண்டு நிறைய விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.