ஒரு முதல்வர்னும் பார்க்காம இப்பிடியா வச்சி செய்வாங்க? சிக்கலில் ஜிப்ஸி படம்!

பார்வையாளர்களின் விமர்சனம் ஒரு முதல்வர்னும் பார்க்காம இப்பிடியா வச்சி செய்வாங்க? சிக்கலில் ஜிப்ஸி படம்! 0.00/5.00

ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஜிப்ஸி”. நாடோடிகள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து ரிலீசுக்கு தயாரானது.


தணிக்கைக்கு சென்ற இப்படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக சொல்லி தணிக்கை குழுவினர் படத்திற்கு சான்றிதழ் தரவில்லை. இதனால் மறு தணிக்கைக்கு சென்றது. அங்கும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.


ஏனென்றால், இப்படத்தில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், அதனால் தான் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கேலி செய்வது போன்ற காட்சிகளும் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


இதனால், இப்படம் மும்பையில் உள்ள தணிக்கை தீர்ப்பாயத்துக்கு சென்றுள்ளது.