அடுத்தகட்டத்துக்கு முன்னேறிய கார்த்தி….!

5

நடிகர் கார்த்தி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கைதி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இதனை தொடர்ந்து “ரெமோ” படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.


இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி, தற்போது திண்டுக்கல்லில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி இருக்கிறார்கள்.


இதில், கார்த்தி ஜோடியாக தெலுங்கு நடிகை ரஷ்மிகா நடித்து வருகிறார், மேலும் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.