எல்லா சீனையும் கட் பண்ணிட்டாங்க! அறிமுக நடிகை கதறல்!!

73


நான் நடிச்ச எல்லா சீனையும் கட் பண்ணிட்டாங்க. அந்த வருத்தம் என் நெஞ்சில் நீங்காத சோகமா இருக்கு, என்று நெஞ்சில் துணிவிருந்தால் பட அறிமுக நாயகி மெஹ்ரின் கூறியுள்ளார். தற்போது தனுசுடன் பட்டாசு படத்தில் நடித்து வரும் மெஹ்ரின், நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்தில் இவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீளம் கருதி வெட்டப்பட்டு விட்டதாம். இதனால் அம்மணி ரொம்பவே பீலிங்கில் இருக்கிறார்.


இதுபற்றி மெஹ்ரின் கூறுகையில், எல்லோருக்கும் அவங்க நடிச்ச சீனை ஸ்கிரீன்ல பார்க்குறதுல ஒரு ஆர்வம் இருக்கும். எனக்கும் அந்த ஆர்வம் இருந்துச்சி. ஆனால் நான் நடிச்ச எல்லா சீனையும் கட் பண்ணிட்டாங்க. இந்த வருத்தம் ரொம்பவே என் மனசை பாதிச்சிருச்சி. இதை மறக்கவே மாட்டேன், என்றார்.