அத்திவரதரை தரிசனம் செய்த “லேடி சூப்பர் ஸ்டார்”…!

பார்வையாளர்களின் விமர்சனம் அத்திவரதரை தரிசனம் செய்த “லேடி சூப்பர் ஸ்டார்”…! 0.00/5.00

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை “நயன்தாரா”. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து “பிகில்”, ரஜினியுடன் இணைந்து “தர்பார்” படங்களில் நடித்து வருகிறார்.


மேலும், தெலுங்கு, மலையாளம் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார்.


அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதரை இன்னும் சில நாட்களில் குளத்தில் மீண்டும் போட்டுவிடுவார்கள். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.


சமிபத்தில் நடிகர் ரஜினிகாந்தும் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். மேலும் பல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.