‘நடிகர் சங்க தேர்தல் பத்தி கவலையில்ல’னு சொன்ன ஐகோர்ட்

பார்வையாளர்களின் விமர்சனம் ‘நடிகர் சங்க தேர்தல் பத்தி கவலையில்ல’னு சொன்ன ஐகோர்ட் 0.00/5.00

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வர்ற 23ந் தேதி தேர்தல் நடக்க இருக்குது. இந்த தேர்தல் சென்னை அடையாறு எம்ஜிஆர்., – ஜானகி காலேஜ்ல நடக்கும்னு சொல்லிருந்தாங்க. இந்த நிலையில தேர்தல் நடக்கும் நாள் அன்னிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கணும்னு நடிகர் விஷால், போலீஸ் கமிஷனர் கிட்ட மனு கொடுந்திருந்தாரு.


பாதுகாப்பு காரணத்துக்காக அங்க தேர்தல் நடத்த வேணாம், வேற இடத்துல நடத்துங்கனு போலீஸ் தரப்புல இருந்து சொன்னாங்க. இத நடிகர் சங்க நிர்வாகிகள் ஏத்துகிறாதால பாதுகாப்பு தர இயலாது என்று போலீஸ் சொல்லிட்டாங்கனு இந்த தேர்தலுக்கு பாதுகாப்பு தர்ற போலீஸிக்கு உத்தரவிடணும்னு சொல்லி சென்னை ஐகோர்ட்டில விஷால் சார்புல மனு தாக்கல் செஞ்சாங்க. இந்த மனு மீதான விசாரணைய ஜூன் 17 விசாரிச்சாங்க.


இந்த வழக்கை விசாரிச்ச ஐகோர்ட், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்ன்றத்தால எம்.ஜி.ஆர். ஜானகி காலேஜ்ல நடிகர் சங்க தேர்தல நடத்த அனுமதிக்க முடியாதுனு சொல்லிருக்காங்க. நடிகர் சங்க தேர்தல் பத்தி கவலையில்ல, பொது மக்களோட பாதுகாப்பே முக்கியம்னு உத்தரவு போட்ருக்காங்க.