ஷங்கருக்கு நிபந்தனை விதித்த  “லைகா”…!

64

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் “இந்தியன் 2”. இப்படத்தில் சித்தார்த், விவேக், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கதை லீக்காகியது அனைவருக்கும் தெரிந்ததே.


மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. பொதுவாகவே ஷங்கர் படம் என்றல் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அந்த வகையில் இந்த படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.


இப்படத்தை லைகா புரோடுக்ஷன் சார்பில் கருணாகரன் தயாரித்து வருகிறார். தற்போது லைகா நிறுவனம் ஷங்கருக்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Related image


அதாவது, பேசிய தொகைபடி படம் உருவாகவில்லை என்றால், ஷங்கர் சம்பளத்தில் மீதி பிடித்து படத்தை முடித்து விடுவார்களாம். இந்த நிபந்தனைக்கு இயக்குனர் ஷங்கர்  ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.