மீண்டும் கார்த்தியை இயக்கவிருக்கும் லோகேஷ் கனகராஜ்…? 

93

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி  வெளியாகி இருக்கும் படம் “கைதி”. இப்படத்தின் விமர்சன ரீதியாக  வரவேற்பை பெற்று வருகிறது.


இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், டில்லி கதாபாத்திரம் தொடருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “உங்கள் அனைவரது பாராட்டுக்கும் நன்றி. ‘கைதி’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொரு நிமிடமுமே ரசித்து வேலை பார்த்தேன். கண்டிப்பாக அதை என்றும் நினைவில் வைத்திருப்பேன். எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் கார்த்தி சார் இருவரும் தந்த இந்த வாய்ப்புக்கு நன்றி. உங்களுடைய அனைத்து மெசேஜ்களுக்கும் போன் கால்களுக்குமான பதில் ஆம். ‘டில்லி மீண்டும் வருவார்'” என்று தெரிவித்துள்ளார்.

Image result for lokesh kanagaraj


தற்போது தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தை  இயக்கி  வருகிறார். இதனை தொடர்ந்து மீண்டும் கார்த்தியை வைத்து “கைதி 2” தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.