பிரச்சனையால் ஐதராபாத் பறந்த “கே.ஜி.எப்” படக்குழு..!

28

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் “கே.ஜி.எப்”. இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்கவயல் அருகில் பெரிய செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனால் அங்குள்ள இயற்கை வளங்கள் மாசுபடுவதாக ஒரு சமூக ஆர்வலர் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பை நீதிமன்றம் தடை செய்தது. அதனால் படக்குழு ஐதராபாத் பகுதியில் மாபெரும் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறது.