ரஜினிக்கு ஜோடியாகும்  கீர்த்திசுரேஷ்…!

பார்வையாளர்களின் விமர்சனம் ரஜினிக்கு ஜோடியாகும்  கீர்த்திசுரேஷ்…! 0.00/5.00

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா, மகளாக நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.


தற்காலிகமா “தலைவர் 168” என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக பரவலாக தகவல் வந்தது. ஆனால் இதில் ஜோதிகா நடிக்கவில்லை.


இந்நிலையில், ரஜினி, சிவாவிடம், இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க, இதுவரை என்னுடன் நடிக்காத நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். 


அதன்படி படக்குழு நடிகை கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.