அஜித்துக்கு ஜோடியாகும்  கீர்த்திசுரேஷ்…?

39

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற  படம் “நேர்கொண்ட பார்வை”. எச்.வினோத் இயக்கிருந்த இப்படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார்.


அஜித் இதனை தொடர்ந்து மீண்டும் “நேர்கொண்ட பார்வை” படக்குழுவுடன் இணைந்து தனது அடுத்த படத்தை தொடங்க இருக்கிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு “தல 60” என்று தலைப்பு வைத்துள்ளனர்.


இதில் முக்கிய கதாபாத்திரத்தில் போனிகபூர் மகள் ஜான்வி கபூர்  நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இளையராஜா, பிரசாத்  ஸ்டூடியோ பிரச்சனை…! காரணம் அனிருத்…?


சமீபத்தில் கீர்த்திசுரேஷ் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் போனிகபூர் அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.