கமலுக்கு சோதனை மேல் சோதனை! இந்தியன் 2 – பின் வாங்குகிறது லைகா!!

139

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு சில நாட்களாக தடைபட்டு இருந்த நிலையில், மீண்டும் தொடங்கியுள்ளது.


இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் சித்தார்த், விவேக், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையை சுற்றயுள்ள பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இதனை தொடர்ந்து கமல் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது. அதற்கு  “தலைவன் இருக்கிறான்” என்று தலைப்பு வைத்து படத்தை தொடங்க இருந்தார்.


இப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருந்தது. மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருந்தார். இந்நிலையில் இப்படம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


ஏனென்றால், “இந்தியன் 2” படத்தின் ஆரம்பகட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கமல்ஹாசனின் அடுத்த படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் யோசித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.