கதாசிரியர் கலைஞானத்திற்கு “கலைமாமணி”…!

பார்வையாளர்களின் விமர்சனம் கதாசிரியர் கலைஞானத்திற்கு “கலைமாமணி”…! 0.00/5.00

கதாசிரியர் கலைஞானம், தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.


நாடகத்தில் நடித்ததன் முலம் சினிமாவில் நுழைந்த இவர் சினிமாவில் அரை நூற்றாண்டை கடந்தவர். தன் திரைப்பட அனுபவங்களக் கொண்டு எழுதிய, “சினிமா சீக்ரெட்” எனும் நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டவர்.


90 வயது நிறைவடைந்த இவருக்கு தமிழக அரசு “கலைமாமணி” விருது அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.