“கைதி” ரிலீஸிலிருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்…! 

143

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “கைதி”. இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று “பிகில்” படத்துடன் மோத இருக்கிறது.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அதனால், எதற்கு விஜய்யுடன் மோதுகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.


ஆனால், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமில்லை என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதாவது படத்தை முடித்து இயக்குனர் இந்த படத்தை  தயாரிப்பாளர் கையில்  கொடுத்துவிட்டாராம்.


அதனால், இந்த ரிலீசுக்கு காரணம் தயாரிப்பாளர் தான் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். “கைதி” படம் தீபாவளி சமயத்தில் வெளியானால் தான் வசூல் ரீதியாக வெற்றிபெறும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கூறினார்.


தீபாவளி பின் பல பெரிய படங்கள் வெளியாக இருக்கிறது. அதனால் இப்படத்தை தீபாவளி வெளியிட்டால் தான் லாபம் தரும் என்று கூறியுள்ளனர்.