சினிமா தியேட்டர் ஸ்நாக்ஸில் கைவைக்கும் கவர்மென்ட்..! 

36

சமீபத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், இனிமேல் தமிழக திரையரங்கில் ஆன்லைன் முலம் மட்டுமே   டிக்கெட் விற்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 


இது திரையரங்க உரிமையாளர்களுக்கு கொஞ்சம் கசப்பதாகத்தான் இருந்தது. இதை பற்றி தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தபோது, இது வரவேற்க கூடிய ஒன்று தான் என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழுவில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கூறுகையில், ஆன்லைன் டிக்கெட்டிங் ஒருங்கிணைப்பு முலம், ஒரு படத்தின் உண்மையான வசூல் என்ன, அதில் லாபம் எவ்வளவு எனபது தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்துவிடும்.


அதேபோல ஒரு நடிகருக்கான ஓபனிங் என்ன இயக்குனருக்கான ஓபனிங் என்ன என்பது துல்லியமாக தெரிந்துவிடும். அதை வைத்து அவர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது இனி சுலபமாகி விடும். சின்ன படங்களின் வசூலை இனியும் முடி மறைக்க முடியாது.


ஆன்லைன் டிக்கெட் வந்த பின்னரும் திரயரங்கு உரிமையாளர்கள் ஏமாற்றாமல் இருக்க, திரையரங்கில் “ஹெட் ஷாட்” கேமரா ஒன்று பொறுத்தப்படவுள்ளது. அது படம் பார்ப்பவர்களின் தலையை மட்டும் எடுக்கும் பார்வையாளர்களின் ப்ரைவஸிக்கு ஒன்றும் ஆகாது என்று தெரிவித்துள்ளனர்.


மேலும், இதன் அடுத்த கட்டமாக நுகர்வோர் பாதுகாப்பது  சட்டங்களை பயன்படுத்தி திரையரங்கில் உணவு பண்டங்களின் விலை, தரம் இரண்டையும் ஒழுங்குபடுத்த அரசு திட்ட மீட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.