நானும் பெரிய நடிகன் தான்ங்க..! சூடான சூர்யா…!

பார்வையாளர்களின் விமர்சனம் நானும் பெரிய நடிகன் தான்ங்க..! சூடான சூர்யா…! 0.00/5.00

நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் “காப்பான்” படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா  இயக்கத்தில் “சூரரை போற்று” படத்தில் நடித்து வருகிறார்.


இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.சூர்யா நடிப்பில் வெளியாக  “காப்பான்” படத்திற்கு  புரோமோஷன் வேலைகள் கொஞ்சம் தாமதமாக தான் நடைபெற்று வருகிறது.


சூர்யாவும் பல படங்களில் நடித்து வருவதால் புரோமோஷன் வேலைகளில் கலந்துகொள்ள முடியாமல் இருக்கிறார். இந்நிலையில், யுடியூப் சேனல் வைத்திருக்கும் ஒரு நிறுவனம் சூர்யாவிற்கு போன் செய்து “காப்பான்” பட பற்றிய சில தகவல்கள்  குறித்து தங்களது நிறுவனத்துக்கு நேர்முகம் அளிக்குமாறு கேட்டுள்ளனர்.

கே.வி.ஆனந்துடன் இணைய ஆசைப்படும் தளபதி  விஜய்…! 


அதற்கு பதிலளித்த சூர்யா, “என் படம் வெளியாகும் போது எனக்கு போன் செய்து அழைக்கிறீர்கள். இதுவே விஜய், அஜித், படங்கள் வெளியாகும் போது ஏன் அவர்களை நேர்முகம் செய்யுமாறு அழைக்க யோசிக்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.


சூர்யா தற்போது பல படங்களில் நடித்து வந்தாலும் அஜித், விஜய் போன்று இன்னும் வளரவில்லை என்று பலர் சூர்யாவை கலாய்த்து வருகின்றனர்.