“காப்பான்” அடக்கிவாசிக்கும் சூர்யா..!

பார்வையாளர்களின் விமர்சனம் “காப்பான்” அடக்கிவாசிக்கும் சூர்யா..! 0.00/5.00

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் “காப்பான்”. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம்  வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்  படத்திற்கான புரோமோஷன் வேலைகள் இன்னும் தொடங்காமல் இருக்கின்றன.


சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கும் சூரரை போற்று படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சூர்யா நினைத்தால்  “காப்பான்” பட புரோமோஷன் வேலைகளில் தீவிரம் கட்டலாம். ஆனால் அவர் இதை பெரிதாக எடுக்கவில்லை.


ஏனென்றால், இதற்கு முன் வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” மற்றும் “என்.ஜி.கே” ஆகிய படங்களின் புரோமோஷன் வேலைகளில் அவர் அந்த படங்களின் மீது நம்பிக்கை வைத்து படத்தை பற்றி அதிகமாக பேசிவிட்டார்.


ஆனால் இந்த இரண்டு படங்களும் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது. அதனால் “காப்பான்” பட புரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்.