ராணுவ வீரரான ஜெயம் ரவி…!

பார்வையாளர்களின் விமர்சனம் ராணுவ வீரரான ஜெயம் ரவி…! 0.00/5.00

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “கோமாளி”. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் தனது 25வது படத்தில் ஜெயமரவி நடித்து வருகிறார்.


இந்நிலையில், ஜெயம் ரவி “என்றென்றும் புன்னகை” படத்தை இயக்கிய அகமது படத்தில் நடிக்க இருக்கிறார். ஜெயம் ரவியின் 26வது படமாக உருவாகும் இப்படத்திற்கு “ஜனகனமன” என்று தலைப்பு வைத்துள்ளனர்.


ஜெயம்ரவி இதில் ராணுவ வீரராக நடிக்க இருப்பதாகவும், தேசியப் பற்று மிக்க கதையம்சம் கொண்ட படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.