இந்தியன் தாத்தாவுக்கு “பை பை”…! 

411

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சித்தார்த், விவேக், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இந்த படத்துக்காக இயக்குனர் பல இடங்களில் பிரம்மாண்ட அளவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த படத்தில் “இந்தியன் தாத்தா” ஏழு பேரை பலி வாங்கி கொல்கிறார். அதனை தொடர்ந்து கமல் சிறையில் தூக்கிலிடுவதாக தகவல் வெளிவந்துள்ளது.


இதனால், “இந்தியன் 3” உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், “இந்தியன் 2″வுடன் இந்தியன் தாத்தாவின் ஆட்டம் முடிந்துவிட்டது.


கமல் இதனை தொடர்ந்து அடுத்ததாக “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை இயக்க இருக்கிறார். ஆனால் இப்படம்  சமீபகாலமாக தடைபட்டுள்ளதாக தெரிகிறது.


அதனால் கமல் “இந்தியன் 2” படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இப்படத்தை விரைவில் முடித்து தருமாறு  படக்குழுவினருக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.