தீபாவளிக்கு பின் பாயும் “எனை நோக்கி பாயும் தோட்டா”

பார்வையாளர்களின் விமர்சனம் தீபாவளிக்கு பின் பாயும் “எனை நோக்கி பாயும் தோட்டா” 0.00/5.00

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கபட்ட படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிக்கும் போதே சில பிரச்சனைகளில் சிக்கிய இப்படம் 2018ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.


பின்பு ரிலீசுக்கு தயாரான இப்படம் சில பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. பலமுறை ரிலீஸ் தினத்தை அறிவித்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டனர்.


இறுதியாக இப்படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ட்ரைலருடன் ரிலீஸ் தேதியை அறிவித்தது. அதன்படி செப் 6 வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தி காத்துக்கொண்டிருந்தனர்.


ஆனால், படம் அன்றும் வெளியாகவில்லை. மேலும் ஒரு சில பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த பிரச்னையை சரி செய்ய கௌதம் மேனன் லைகா  நிறுவனத்திடம் உதவி கேட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கமலுக்கு சோதனை மேல் சோதனை! இந்தியன் 2 – பின் வாங்குகிறது லைகா!!


இந்த படத்திற்கு உதவி செய்ய முன்வந்த லைகா, கௌதம் மேனனுக்கு ஒரு கட்டளையை போட்டுள்ளது. அது என்னவென்றால், படத்தை தீபாவளி முடிந்த பிறகு தான் வெளியிட வேண்டும் என்று. அதனால் கௌதம் மேனனும் இதனை  ஒத்துக்கொண்டு படத்தை  தீபாவளிக்கு பின் வெளியிடுவதாக ஒத்துக்கொண்டார்.