பொள்ளாச்சி பாலியல் சம்பவமும்; நேர்கொண்ட பார்வையும்! உணர்ச்சிவசப்படும் பிரபல இயக்குனர்!!

பார்வையாளர்களின் விமர்சனம் பொள்ளாச்சி பாலியல் சம்பவமும்; நேர்கொண்ட பார்வையும்! உணர்ச்சிவசப்படும் பிரபல இயக்குனர்!! 0.00/5.00

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படம் எந்தவிதமான எதிர்மறை விமர்சனங்களை பெறாமல் வசூலில் சாதனை படைத்தது வருகிறது.


இப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில், படத்தை பார்த்த இயக்குனர் வசந்த பாலன் தனது சமூக வலைதள பக்கத்தில், “பிங்க் திரைப்படம் வெளியான நாளிலிருந்து நான் செல்லும் திசையெங்கும் அதனைப்பற்றி பேசியிருக்கிறேன். புகழ்ந்திருக்கிறேன். ஒரு திரைப்படம் என்ன செய்யும்? சமுதாயத்திற்கு என்ன செய்து விடமுடியும் என்கிற சமூகத்தின் கேள்விகளுக்கு நோ என்கிற பதிலை திரைப்படம் பெண்கள் சார்பாக சொல்லமுடியும் என்று ஆணித்தரமாக நிருபித்த திரைப்படம்.

டெல்லி மற்றும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு என் சுற்றியுள்ள சமூகம் பெண்கள் மீது தான் பழி சொற்களை உதித்த வண்ணம் இருந்தது. அதற்கு சரியான பதில் “நோ”. இந்திய சமூகத்தின் பண்பாட்டு தளத்தின் மீது ஏறி உரக்க அதன் கறைகளை களைகிற ஒரு சொல்.


இந்த திரைப்படம் தமிழில் அதுவும் அஜித்குமார் நடிக்க தயாராகப்போகிறது என்ற செய்தியை அறிந்தேன். நல்ல முயற்சி தான் ஆனால் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யும் என்கிற கேள்வி இருந்தது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் முன்னோட்டத்தில் சண்டைக்காட்சியை பார்த்த போது இயக்குநர் வினோத் இதை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்று அறிய ஆர்வமானேன். வேலைப்பளு காரணமாக நேற்றிரவு தான் படத்தைப்பார்த்தேன்.


வீட்டு உரிமையாளரை, அந்த பெண்களை தொந்தரவு செய்யும் பணபலம் மற்றும் அதிகார பலம் படைத்த கும்பல் வக்கீலையும் தொந்தரவு செய்யும் தானே? அப்படி தொந்தரவு செய்கையில் ஒரு சண்டைக்காட்சி வரும் தானே. அஜித்துக்காக செய்த திணிப்பின்றி மிக சரியாகப் பொருந்துகிறது. திரையில் ரசிகர்களின் விசில் பறக்கிறது. பிங்க் படத்தை பலமுறை பார்த்த போதும் நமக்கு ஏன் இந்த இடம் தோணாமல் போனது. ரீமேக் ஆகிறது என்ற போதும் எல்லோரையும் போல நாமும் ஏன் சந்தேகக் கண்களுடன் பார்த்தோம் என்ற குற்ற உணர்ச்சியும் தாழ்வு மனபான்மையும் ஏற்பட்டது.


தொடர்ந்து கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த அஜித் இது போன்ற படங்களிலும் நடிக்க முன்வருவது மிக ஆரோக்கியமானது. சிறப்பானது. பாராட்டுக்குரியது.இயக்குநர் வினோத்அவர்களுக்கு என் பாராட்டுகள்” .


இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் கூறியிருக்கிறார்.