இயக்குனராகிறார் புளுசட்டை மாறன்…! பதுங்கி பாய காத்திருக்கும் பட தயாரிப்பாளர்கள்…!

பார்வையாளர்களின் விமர்சனம் இயக்குனராகிறார் புளுசட்டை மாறன்…! பதுங்கி பாய காத்திருக்கும் பட தயாரிப்பாளர்கள்…! 0.00/5.00

தற்போது வாரந்தோறும் முன்னணி நடிகர்களின் படங்கள்  வெளியானாலும் சரி, வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள்  வெளியானாலும் சரி, ரசிகர்கள் அந்த படத்தின் விமர்சனங்களை கேட்டு தான் திரையரங்கிற்கு செல்வார்கள்.


அந்த வகையில் பலர் திரை விமர்சனங்களை தங்களது வலைப்பக்க பதிவில் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் புளுசட்டை மாறன், இவர் வாரந்தோறும் வெளியாகும் படங்களை தன்னுடைய மோசமான விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என பலரது மனதை புண்படுத்தி வருபவர்.


இவரது விமர்சனங்களையும் கேட்க சில ரசிகர்கள் உள்ளனர். சிலர் இவரது விமர்சனத்தை மதிக்க மாட்டார்கள். ஒரு சிலர்  இவரை பார்த்து “இவர் எதோ சில வருடங்கள் சினிமாவில் இயக்குனராக பனி புரிந்தவர் போல் பேசுகிறார் என்றும் ஒரு படத்தை பற்றி மோசமான விமர்சனம் செய்வது ஈஸி, நிங்கள் ஒரு படத்தை எடுத்து பாருங்கள்” என்றும் தெரிவித்துள்ளாரகள்.

நானும் பெரிய நடிகன் தான்ங்க..! சூடான சூர்யா…!
 
இது தற்போது நிஜமாக போகிறது. அதாவது புளுசட்டை  மாறன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த செய்தி நீண்ட நாட்களாகவே பேசி வந்த நிலையில், இது தற்போது உறுதியாகியுள்ளது.


இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 14ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.