சூர்யாவை விட்டு ரஜினியை  தேடி சென்ற சிறுத்தை சிவா…!

63

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


இப்படம் 2020 பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ரஜினி மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கத்தில் நடிப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.


ஆனால், அந்த செய்தி வதந்தி ஆகிவிட்டது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ரஜினிகாந்தை இயக்குனர் சிவா இரண்டு முறை சந்தித்து படம் பற்றி பேசியுள்ளார்.


இப்படத்தை சன்பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க இருக்கிறார். ரஜினிகாந்திற்கு முன் இயக்குனர் சிவா நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.


அந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க இருந்தார். இந்நிலையில் இயக்குனர் சிவா அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

Image result for thalaivar 168


எதற்கு திடிரென்று சிவா, சூர்யா நடிக்க இருந்த படத்தை விட்டு சென்றார் என்று தெரியவில்லை. ஒரு வேளை சூர்யாவிற்கு கையில் அதிகம் படம் இருப்பதால் அந்த இடைவேளையில் ரஜினியை வைத்து படத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.